பிரபல நாட்டுப்புற பாடகியான பறவை முனியம்மா, மரணம் அடைந்ததாக சமீபத்தில் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் பொய் என அவரின் மகன் ஒரு விடியோவை வெளியிட்டார்.
தமிழ் சினிமாவின் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தூள் என்ற படம்மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானவர், பறவை முனியம்மா. அதுமட்டுமின்றி, இவர் பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இவருக்கு சமீப காலமாக சிறுநீரக தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பறவை முனியம்மாள் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அது பொய் என பறவை முனியம்மாவும் அவரின் மகனும் ஒரு வீடியோவை பதிவிட்டனர். அதில் அவர் நலமாக உள்ளதாக கூறினார்.
மேலும் வேலம்மாள் மருத்துவமனை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், பறவை முனியம்மாள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் அதற்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவுள்ளது என அந்த அறிக்கை மூலம் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…