கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலகின் முதல் தடுப்பூசி எனக் கூறும் “ஸ்பூட்னிக் வி” உற்பத்தியை ரஷ்யா தொடங்கிவிட்டதாகவும், இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரவுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியை மாஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒன்றிணைப்புடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது நடத்தப்படும் இறுதிகட்ட சோதனைக்கு முன்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்தது. அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக்.
சோவியத் யூனியனால் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் இதுவாகும் ஸ்பூட்னிக் என்றால் சக மனிதன் என்பது பொருள். ஆனால், அது நாளடைவில் ஸ்பூட்னிக் என்றால் செயற்கைகோள் எனும் அர்த்தம் கொள்ளும் ரஷ்யாவில் பிரபலமானது. அதனால் தான் கொரோனா தடுப்பூசிக்கும் இதே பெயரை அரசு வைத்துள்ளது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…