எஸ். பி. பி பூரண நலம் பெற அவரவர் வீடுகளில் நாளை மாலை 6 மணிக்கு 1நிமிட மௌனமாக பிரார்த்தனை செய்யுமாறு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கமல்ஹாசன், பாரதிராஜா, சிவகுமார், ஏஆர். ரஹ்மான், இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் மீண்டு வருவதற்காக திரையுலக பிரபலங்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, மொழி வேறுபாடு இல்லாமல், இனம் வேறுபாடு இல்லாமல் ஒரு பொது கலைஞனுக்காக நாளை மாலை 6 மணிக்கு ஒரு நிமிடம் மெளனமாக பிரார்த்திக்கிறோம். அதன் பின் அவரது பாடல்கள் ஒலிப்பரப்பப்படும் என்றும், அதில் அவர் எழுந்து வருவார். மறுபடியும் அவரது குரல் ஒலிக்கும், மேலும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவார். தயவுசெய்து அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து மெளன பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…