வலிமை படத்தின் அப்டேட்டானது படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் தேதியை முடிவு செய்த பின்னரே வெளியாகும் என்று தல அஜித் தரப்பிலிருந்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித் வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழுவினர் தரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.நேற்றைய தினம் அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது என்று கேட்க அஜித் பிப்ரவரி மாத இறுதியில் வரும் என்று கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது . தற்போது இதுகுறித்து தல அஜித் தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது , ஹைதராபாத்தில் வைத்து தல அஜித்தின் வலிமை அப்டேட் இந்த குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என்று கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளது .
இறுதிகட்ட படப்பிடிப்பானது ஸ்பெயின் உள்ளிட்ட ஒரு சில வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,ஆனால் அங்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எப்படி சாத்தியம் என்பது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த உள்ளதாகவும் , மேலும் வலிமை அப்டேட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் முடிவு செய்த பின் தான் வெளிவரும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை படக்குழுவினர் சரியான நேரத்தில் வலிமை அப்டேட்டை தருவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…