கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாதுறையில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், வில்லன்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியலை சைமா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நவாசுதீன் சித்திக் (பேட்ட) படத்திற்காகவும், அர்ஜுன் தாஸ் (கைதி)படத்திற்காகவும், கே எஸ் ரவிக்குமார் (கோமாளி) படத்திற்காகவும், பகவதி பெருமாள் ( சூப்பர் டீலக்ஸ்) படத்திற்காகவும், ஜெகபதி பாபு(விஸ்வாசம்) படத்திற்காகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சைமாவின் இணையதளத்தில் சென்று ரசிகர்களும், பொதுமக்களும் தங்களுக்கு பிடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு விருது வழங்கப்பட்டும். இந்த விருது விழா ஹைதராபாத்தில் வரும் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…