ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நடன இயக்குநராகவும் சாய்பல்லவி மாறவுள்ளார்.
தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாய்பல்லவி தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமில்லாமல் சிறப்பாக நடனமாடுபவரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டில் சிறப்பாக வளைவு நெளிவுடன் வேகமாக நடனமாடும் நடிகைகளில் முதலிடம் சாய்பல்லவிக்கு தான்.
சமீபத்தில் வெளியான தனுஷின் மாரி2 படத்தில் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் லவ் ஸ்டோரி படத்தின் இயக்குநரான சேகர் கம்முலா, இதிலுள்ள ஒரு பாடலுக்கான நடனத்தை அமைக்கும்படி சாய்பல்லவியிடம் கேட்டு கொண்டாராம். அதற்கு சாய்பல்லவி ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, இனி முதல் நடன இயக்குனராகவும் கலக்க இருக்கிறார்.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…