சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக நேற்று முன்தினம் ப்ரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ராம் சரண் என பலர் கலந்து கொண்டனர். இதில் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.
அப்போது விஜய் சேதுபதி பற்றி சிரஞ்சீவி கூறுகையில் விஜய் சேதுபதி எனது தம்பி போல என பெருமையாக குறிப்பிட்டார். இதனை கேட்டதும் அந்த சமயம் சிரஞ்சீவியின் காலைத்தொட்டு வணங்கினார் விஜய் சேதுபதி. இதற்கு முன்னர் விஜய் சேதுபதி திரையுலகில் யாருடைய காலில் விழுந்து வணங்கியதில்லை என கூறப்படுகிறது. அந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, சிரஞ்சீவி காலில் விழுந்தது திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…