ஷகீலா அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை குறும்படமாக எடுப்பதில் சரயுமோகன் ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சரயுமோகன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நிலா நகர், காதலுக்கு மரணமில்லை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுடன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது இவர் ஷகீலா கதாபாத்திரத்தில் ஷகீலா என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
அதாவது கோட்டபுரம் அக்ஷரா தியேட்டரில் ஷகீலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற படம் வெளியாகும் போது, ரசிகர்களின் முன்பு ஷகீலா முதல் நாள் முதல் ஷோவில் தோன்றுகிறார். அதனையடுத்து அங்கு நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது தான் இந்த குறும்படம். சுஜீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குறும்படத்தை வரும் 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷகீலா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…