இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி என்ற பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலாவெசி என்ற பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான இந்த நிலநடுக்கம் 59 கி.மீ தூரத்தில் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதி மக்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தின் பொழுது கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
ஆனால், கட்டிடங்கள் எதுவும் இடிந்து விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு முன்னரே காலை 10 மணியளவில் சுலாவெசியின் மத்திய பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025