ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பை துன்புறுத்தியதாக கூறி சிம்பு மீது விலங்கு நல ஆர்வலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அதாவது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்திருக்கும் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை பிடித்து பைக்குள் போடும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது .
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழுள்ள ஒரு உயிரினத்தை வைத்து படம் பிடிப்பது குற்றம் என்றும், பொதுவாக பாம்பின் பல்லை எடுத்த பின்னரோ அல்லது அதன் வாய் ஒட்டப்பட்ட பின்னரோ தான் சினிமாவில் பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில், சிம்பு வனவிலங்கை துன்புறுத்தி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக அவரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேளச்சேரி வனத்துறை அலுவலகத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் புகார் செய்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…