கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கவுள்ள படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’என்று டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்துள்ளனர்.அந்த இரு படங்களின் மெகா ஹிட்டிற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் . ஹீரோயின் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே சமூக ஊடகங்களில் திரிஷா அல்லது நயன்தாரா இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை . மூன்றாவது முறையாக சிம்பு -கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே அதிகரித்துள்ளது.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…