இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த மாநாடு படத்திற்கான டீசர் ஏ ஆர் ரகுமான் அவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பிலும் உருவாகி வரக்கூடிய சிம்புவின் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த், ஆகாஷ் ஆகிய பிரபலங்கள் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அரசியலை மையப்படுத்தி இந்த படம் இருக்கும் எனவும் கூறப்பட்டது. மேலும் சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஓரளவு முடிவடைந்து உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மாநாடு படத்திற்கான டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிருத்விராஜ், தெலுங்கில் ரவி தேஜா, கன்னடத்தில் சுதீப்பும் வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் மாஸாக சிம்புவின் மாநாடு பட டீஸர் வெளியாகி இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். மேலும் மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் தோன்றும் சிம்பு மிக ஸ்டைலாக இருப்பதாகவும் ஹாலிவுட் படங்கள் போல படம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்களால் கூறப்படுகிறது. இதோ தமிழில் வெளியாகிய டீசர்,
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…