டான் படத்திற்காக சிவகார்த்திகேயன் ஸ்டைலிஷ் லுக்கில் மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது .இந்த நிலையில் தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் வெளியாகியுள்ளது . கல்லூரி மாணவனுக்குடைய ஸ்டைலிஷ் லுக்கில் உள்ள சிவகார்த்திகேயனின் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…