மியான்மரில் சமூகவலைத்தள சேவைகள் முடக்கம்…!

மியான்மரில் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது.
மியான்மரில் ராணுவத்திற்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, அங்கு சமூகவலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது.
மேலும், அந்நாட்டு அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முக நூல் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் இந்த சேவைகள் மீண்டும் தொடர்வதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025