பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக பகல்-இரவு பாராமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் மியான்மரின் மையப்பகுதியான மண்டலே மற்றும் சாகைங் பகுதிகளை கடுமையாக பாதித்தது. அதைப்போல, நூற்றுக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், மடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. உயிரிழப்பு முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, […]
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்து இருந்த சூழலில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புது உடை அணிந்துகொண்டு பல இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலானை கொண்டாடி வருகிறார்கள். மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் […]
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது சாகைங் பால்ட் (Sagaing Fault) பகுதியில், மண்டலே நகருக்கு அருகே, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது கடந்த நூற்றாண்டில் மியான்மரை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று […]
பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் மையப்பகுதி சாகைங் (Sagaing) நகருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே (Mandalay) மற்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 -ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் […]
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 […]
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் ஐந்து நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மியான்மர் இன்னும் மீளவில்லை, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது, காட்டங்கள் இடிபாடுகளில் சிக்கிய பலர் மாயமானதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. அதே நேரத்தில், மீட்புப் […]
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் (7.7, 6.4) கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஐந்து நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பெரிய பெரிய கட்டடங்கள் தரைமட்டமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேல் […]
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 59 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாண்டலே நகரில் மசூதி இடித்து விழுந்ததால், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. அந்த வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு […]
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, நிலநடுக்கம் காரணமாக இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த […]
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் தலைநகரான நைபியிடாவிலிருந்து வடகிழக்கே அமைந்துள்ள சகாய்ங் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 12 நிமிட இடைவெளியில் மீண்டும் […]
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் 24 ஜனவரி (இன்று) அதிகாலை 12.53 மணியளவில் 4.8 ரிக்டர் எனும் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது […]
Earthquake : மியான்மரில் 4.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS தெரிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 28) ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் மியான்மர் நாட்டின் சீன எல்லை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையமான NCS (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பூமத்திய அட்சரேகை 25.39 மற்றும் தீர்க்கரேகை 96.06 இல் நிலமட்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் […]
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான […]
கடந்த 24 மணி நேரத்தில் நேபாளம், மியான்மர், காஷ்மீர், என இந்தியா மற்றும் எல்லையையொட்டி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை நேபாளத்தில் 5.3 என்ற அளவிலும், மாலை 4.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்றிரவு 10.56 மணிக்கு ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று காலை 2 மணிக்கு மணிப்பூரிலும் 3.5 என்ற அளவிலும், மணிப்பூர் எல்லையை […]
மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் முதலமைச்சர் கோரிக்கையினால் மீட்பு. தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்டு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள். தமிழகள் 13 பேர் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளனர். தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்றிரவு 8 மணிக்கு […]
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக […]
மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
போலி ஆதார் மூலம் பயணம் செய்த 14 பெண்கள் உட்பட 24 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் தென்னவுபல் எனும் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ எல்லையில் பயணம் செய்து கொண்டிருந்த சிலரை, குதேங்தாபியில் பகுதி ராணுவத்தினர் சோதனைச் சாவடியில் வைத்து வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் போலியான ஆதார் கார்டு மூலமாக பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. […]
மியான்மர் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இப்பகுதியிலிருந்து 82 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மியான்மரிலிருந்து பங்காளதேஷ் வரை தனது பெற்றோர்கள் இருவரையும் 7 நாட்களாக தோள் கூடையில் வைத்து சுமந்து சென்ற மகன். மியான்மரை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது பெற்றோர் இருவரும் வயதான நிலையில் இருந்ததால், அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார். மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் […]