மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,719 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக பகல்-இரவு பாராமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் மியான்மரின் மையப்பகுதியான மண்டலே மற்றும் சாகைங் பகுதிகளை கடுமையாக பாதித்தது. அதைப்போல, நூற்றுக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், மடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
உயிரிழப்பு
முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக இருந்தது. அதனைத்தொடர்ந்து மார்ச் 31 நிலவரப்படி 1,700 ஆக உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஏப்ரல் 2-ஆம் தேதி ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 2,719 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 3,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும் இன்னுமே நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்தியா உதவிகரம்
இந்த பேரழிவை சமாளிக்க, மியான்மர் அரசு அரிதாக சர்வதேச உதவியை கோரியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்தியா “ஆபரேஷன் பிரம்மா” என்ற பெயரில் மீட்பு மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்பியது, மேலும் 137 டன் நிவாரண பொருட்களை வழங்கியது. மண்டலேயில் 60 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. அதைப்போல, சீனா 135-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்களையும், $13.8 மில்லியன் மதிப்பிலான உதவி பொருட்களையும் அனுப்பியது, மேலும் மண்டலேயில் 91 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்டது.
மியான்மரின் உள்நாட்டு போர் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு மீட்பு பணிகளை சிக்கலாக்கியுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததால் உதவி பொருட்கள் விநியோகம் தாமதமாகிறது. உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிர்களை காப்பாற்ற முயல்கின்றனர், இன்னுமே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025