திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலிற்கு நடிகர் சிம்பு சென்றுள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விருவிருப்பாக மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். அதேபோல் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார்.
அவர் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிம்பு அடுத்ததாக வருகின்ற டிசம்பர் மாதம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…