இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என கூறலாம். கடந்த 2017-ஆம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் தொடர் கமிட்மெண்ட்களால், படம் நீண்ட நாட்களாக தள்ளி செல்கிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் இந்த வாரம் படத்தின் இப்படத்தின் டப்பிங்கை பணிகளை முடிப்பார் என்றும், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுடன் விரைவில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்தும் முடிந்த பிறகு வரும் ஜூலை மாதம் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…