சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படமான தளபதி என்ற படத்தின் டைட்டிலை விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆம், நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மடோனா செபாஸ்டின், தமன்னா உள்ளிட்டவர்களின் பெயர்கள் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு அடிப்பட்டது. மேலும் தளபதி 65ல் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுவரை படத்தின் டைட்டில் முடிவு செய்யப்படாத நிலையில் தளபதி 65 குறித்த பட டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தளபதி’ படத்தின் டைட்டிலை தளபதி – 65 படத்திற்கு டைட்டிலாக வைக்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…