காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.
இப்படத்தில் பணியாற்றிய 150 பணியாளர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க நாணயத்தை நடிகர் சூர்யா பரிசாக அளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்னர் பிகில் ஷூட்டிங் நிறைவு பெற்றதும் தளபதி விஜய் படக்குழுவினருக்கு மோதிரத்தை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…