சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 5 உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்..!

Published by
Rebekal

தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது.

இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் சிறுநீரகத்தை மிக முக்கியமாக பேணி காக்க வேண்டும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகுதல், சிறுநீரக புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

எனவே நாம் முறையான நேரங்களில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் இந்த 5 உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். அவை என்ன என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கீரை

கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ, சி, கே, இரும்பு, மெக்னீஷியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளது. எனவே இதை அதிக அளவில் உணவில் சேர்ப்பதன் மூலமாக நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். மேலும் கீரையில் உள்ள பீட்டா கரோட்டின் காரணமாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

அன்னாசி பழம்

அன்னாசி பழம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதை உட்கொள்வதன் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமலும் தடுக்கிறது.

குடை மிளகாய்

இந்த குடை மிளகாயில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் அதிக அளவு வைட்டமின் சி சத்துகள் அடங்கியுள்ளது. எனவே இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க உதவும். மேலும் இதில் இன்டோல்ஸ், குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் தியோசயனேட்டுகலும் நிறைந்துள்ளது. எனவே காலிபிளவர் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

பூண்டு

பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் உள்ளது. எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பூண்டை  நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம். இதை அதிக அளவில் உணவில் சேர்ப்பதன் மூலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

4 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

7 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

8 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

8 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

11 hours ago