உலகளவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்பொழுது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகன உற்பத்தி கொடிகட்டி பறக்க தொடங்கவுள்ளது. மேலும், பல சலுகைகளையும் அளிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் டாடா நிறுவனம், 2020-ன் இறுதி தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் 3 மாடல் கார்களுக்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டாடா டியாகோ (Tata Tiago)
டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார், தற்பொழுது பெட்ரோல் என்ஜினில் மட்டுமே கிடைக்கிறது. இந்த டியாகோ, ரூ.4.70 லட்சம் முதல் தொடங்குகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இருவகையாக உள்ளது. தற்பொழுது டாடா நிறுவனம், டியாகோவை ரூ.15,000 தள்ளுபடியுடன், ரூ.10,000 பரிமாற்ற போனஸுடன் வழங்கப்பட்டு வருகிறது.
டாடா நெக்சான் (Tata Nexon):
டாடா நெக்சான், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. இந்த இரண்டு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. தற்போது ஆண்டு இறுதி தள்ளுபடியில், டாடா நெக்ஸன் ரூ.15,000 சலுகையில் வழங்கப்படுகிறது.
விலை:
பெட்ரோல்- ரூ. 6.99 லட்சம் முதல்.
டீசல்- ரூ.8.45 லட்சம் முதல்
டாடா ஹாரியர் (Tata Harrier)
டாடா நிறுவனத்தின் அதிரடி கார், டாடா ஹாரியர். இதில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த கார், ரூ.25,000 மதிப்புள்ள நுகர்வோர் தள்ளுபடியையும், ரூ.40,000 மதிப்புள்ள ட்ரான்ஸ்பர் சலுகையையும் பெறலாம். இதன் விலை, 13.84 லட்சம் முதல் தொடங்கவுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…