அஜித் நடிக்கவுள்ள 61-வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முக்கிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க படக்குழு ரஷ்யா செல்லவுள்ளனர். வரும் 19-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தை அஜித்தை வைத்து ஏற்கனவே படம் இயக்கிய ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61- வது திரைப்படம் குறித்த தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தல-61 திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளது உறுதி ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
தல அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாக உள்ள மூன்றாவது திரைப்படமாக தல-61 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாதத்திற்குள் வலிமை படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடும் என்பதால் அஜித் 61 வது படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் தீயாக பரவி வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…