இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65” படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகிய நிலையில் தற்பொழுது இரண்டாவது பார்வை போஸ்டர் வெளியாகி ட்விட்டரில் பட்டையை கிளப்பி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கியுடன் முதல் பார்வை போஸ்டர்:
இந்நிலையில், ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜயின் பிறந்த நாளை கொண்டாட ஆர்வத்துடன் காத்திருந்தனர்.அவர் பிறந்தநாளன்று “தளபதி 65” பற்றிய பிரத்தியேக தகவல் வருமா என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக நேற்று இப்படத்தின் தயாரிப்பு தரப்பில் முதல் பார்வை போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த முதல் பார்வை போஸ்டரில் விஜய் துப்பாக்கியுடன் ஆக்ரோசமாக இருக்கும் தோற்றம் வெளியாகி படம் அதிரடி ஆக்ஸன் படமாக இருக்குமோ இருந்த எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
மிரட்டும் இரண்டாவது பார்வை போஸ்டர்:
இந்நிலையில் தளபதி விஜய் 47 வது பிறந்தநாளான இன்று 12 மணிக்கு ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.காலையில் வெளியான முதல் பார்வை போஸ்டரில் இது ஆக்ஸன் படம் என்று உறுதி செய்ததை அடுத்து ,இரண்டாவது பார்வை அதை மிரட்டும் விதமாக அமைந்துள்ளது.
ட்விட்டரில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நடிகை நயன்தாரா,நடிகர் பிரேம்ஜி ,இப்படித்தின் இசையமைப்பாளர் அனிருத் ,ஜிவி பிரகாஷ் போன்ற பிரபலங்கள் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…