போட்டியில் ஏற்பட்ட விபரீதம்.! கலந்து கொண்ட பெண் பரிதாப பலி.! நடந்தது என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது.
  • அந்த போட்டியில் பங்கேற்ற 60 வயதுடைய பெண் ஒருவர், ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நிமிடத்தில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்து உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் 60 வயதுடைய பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நிமிடத்தில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்தார் என தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, லேமிங்டன் என்னும் கேக் வெண்ணெய்யால் செய்யப்பட்டு சாக்லேட் சாஸால் கோட்டிங் செய்யப்பட்டு உலர்ந்த தேங்காய் துருவல் தூவப்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் நடக்கும் முன் லேமிங்டன் கேக்கை போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிடுவது படம் பிடிக்கப்பட்டது. பின்னர் உயிரிழந்த பெண் அசௌகரியங்களை உணரும் முன்பு, போட்டி நடைபெற்ற இடத்தில் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டார் என நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அந்த காணொளியில் சம்பவம் நடக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரும் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். போட்டியாளர்களுக்கு முன் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஹெர்வே ஹோட்டல் சார்பில் பேஸ்புக்கில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் இந்த சம்பவம் நிகழ்ந்த போது ஆம்புலன்ஸின் சேவைக்காக நன்றியும் தெரிவித்திருந்தனர். பின்னர் இந்த ஆஸ்திரேலியா நாளுக்காக கேக் உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவது அங்கு மிகவும் பிரபலமாகும். முதல் முறையாக ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததை குறிக்கும் விதமாக இந்த ஆஸ்திரேலியா நாள் அங்கு கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் லேமிங்டன் கேக், பைஸ், ஹாட் டாக் போன்ற உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு போட்டியாளர்கள் இதில் பரிசுகளை வெல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

7 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

44 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago