நடிகர் ராஜ்கிரணின் மகன் அவரது என் ராசாவின் மனசில படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசில ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகமானவர் ராஜ் கிரண்.மீனா ஹீரோயினாக நடித்த இப்படத்தின் மூலம் தான் வடிவேலுவும் சினிமாவில் அறிமுகமானார் . இந்த நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ராஜ் கிரண் அறிவித்துள்ளார்.இதனை ராஜ் கிரணின் மகன் இயக்க உள்ளதாகவும், இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்கிரண் கூறியதாவது,இறை அருளால், இன்று என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.”என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…