தொடர்ச்சியாக புகை பிடிப்பதால் உள்ளுறுப்புகள் சேதமடைந்திருப்பதை பார்த்திருக்கிறோம், கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், உடல் மஞ்சள் நிறத்தில் மாறிய முதியவரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அந்த சிகரெட்டின் பாக்கெட்டிலேயே எழுதியிருந்தாலும், அதை படித்து விட்டு புகைப்பவர்கள் தான் நமது அதி புத்திசாலிகள். பலருக்கு இதனால் நுரையீரல் பிரச்சனை ஏற்படுவது, சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இதுவரை நாம் கேள்விப்படாத ஒரு அதிர்ச்சியான சம்பவம் தொடர்ச்சியாக புகைபிடித்த முதியவர் ஒருவருக்கு நடந்துள்ளது.
சீனாவில் உள்ள 60 வயதுடைய முதியவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கணையத்தில் பெரிய கட்டி இருப்பதும், இதன் காரணமாக பித்த நாளங்கள் அடைக்கப்பட்டிருப்பதும் கண்டறியயப்பட்டுள்ளது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீண்டும் வாழ விரும்பினால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், கணையத்திலுள்ள கட்டியால் பித்த நாளங்கள் அடைக்கப்பட்டதால் மஞ்சள் காமாலை உருவாகியதாகவும், அதன் காரணமாக தான் மஞ்சள் நிறமி உருவாகி உடல் இவ்வாறு ஆகியதாகவும் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் முதியவரின் உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…