வித்யா பாலன் நடிப்பில் வெளியான “The Dirty Picture” படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்த ஆர்யா பானர்ஜி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .
பிரபல பெங்காலி நடிகையான ஆர்யா பானர்ஜி பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் .மாடலான இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான “The Dirty Picture” எனும் படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்திருந்தார் .இந்த படத்தினை மிலன் லுத்ரியா இயக்க வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
33 வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மூன்றாவது மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார் . நேற்றைய தினம் அவரது வீட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லையாம் .மேலும் பலமுறை அழைத்த தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கமால் இருந்ததால் அவரது வீட்டில் பணிபுரிபவர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆர்யா பானர்ஜி படுக்கையில் இறந்து கிடந்தார் .
இவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே பல பிரபலங்கள் ஆர்யா பானர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் .
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…