நடிகர் ரஜினி நடிகை மீனாவை கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதனையடுத்து இவர் ரஜினியின் எஜமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிய இவர், மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத் துள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி தன்னை தன் அம்மாவிடம் கிண்டல் செய்ததாக 36 வருடங்கள் கழித்து கூறியுள்ளார். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. நடராஜ் இயக்கத்தில் 1984ல் வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்த படத்தில் அம்பிகா முக்கிய கதா பாத்திரத்திலும், மீனா குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார்கள். இந்த படம் நேற்றைய முன்தினம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப பட்டது. அப்போது இந்த படத்தில் நடித்த நல்ல நினைவுகளை நடிகை மீனா சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகை அம்பிகா மீது பால் ஊற்றும் காட்சியையும், ரஜினி அவர்கள் சாக்லேட் கொடுக்கும் போது அதை மீனா கடித்து துப்புவதை போன்ற காட்சியையும் குறிப்பிட்ட மீனா, அதனுடன் தனது குண்டான உருவத்தை கேலி செய்யும் விதத்தில் தன்னுடைய அம்மாவிடம் ‘நீங்கள் எந்த கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று கேட்டு ரஜினி காந்த் கிண்டல் செய்ததையும் கூறியுள்ளார். இதுநாள் வரை அவர் கிண்டல் செய்த ரகசியத்தை யாரிடமும் கூறவில்லை என்றும், தற்போது தான் இதனை பற்றி கூறியதாகவும் கூறியுள்ளார். ரஜினி காந்த் மீனாவை கிண்டல் செய்ததாக கூறிய இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…