அந்த மாதிரி வீடீயோவை பார்க்க கட்டாயப்படுத்திய பிரபல நடன இயக்குனர்.! பாலியல் புகார் அளித்த பெண்.!

- சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, இவர் தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.
- இந்நிலையில், பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும், புகார் அளித்துள்ளார்.
சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கனேஷ் ஆச்சர்யா, இவர் தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது ஹிந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக உருவாகியுள்ளார். சமீபத்தில் வெளியான கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் பல படங்களில் நடித்தும், பின்னர் ஸ்வாமி, மனி ஹே தோ ஹனி ஹே, ஏஞ்சல், பீகாரி ஆகிய இந்தி படங்களை இயக்கியும் உள்ளார்.
சமீபத்தில், நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறிய, நடிகை தனுஶ்ரீ தத்தா கனேஷ் ஆச்சர்யா மீதும் புகார் கூறியிருந்தது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கனேஷ் ஆச்சர்யா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய் சொல்லுகிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது புகார் அளித்துள்ளார். அதில், கனேஷ் ஆச்சர்யா தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனை மகாராஷ்ட்ராவில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக இவர் புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025