கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .ஆம் தேசிங்கு பெரியசாமி தனது திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதுடன் படத்திற்கான கதையையும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ரஜினி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக தேசிங்கு பெரியசாமியை பாராட்டியதுடன் தனக்கும் ஒரு படத்திற்காக கதையை தயார் செய்யுமாறு கூறியதும் குறிப்பிடத்தக்கது.எனவே ரஜினியின் அடுத்த படத்தினை யார் இயக்குவார் என்ற சந்தேகம் ரசிகர்களைடையே எழுந்துள்ளது.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…