கார் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்த நியூஜெர்ஸியை சேர்ந்த 22 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நியூஜெர்சியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இரவு நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 2018 ஆம் ஆண்டு தூங்கிய நிலையில் கார் ஓட்டியதால் கார் கவிழ்ந்து வெடித்துள்ளது. இதனையடுத்து அவர் 80 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவரது பார்வை, இயல்பான நடைகள் இல்லை. சிதைந்த முகம் மற்றும் கைகள் எறிந்த நிலையில் இருந்ததால் அவர் முன்பு போல வாழ முடியவில்லை. மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து இவருக்கு பல்வேறு மாற்று ஒட்டுண்ணி உயிர்காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர் மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் என கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பின்பதாக இவருக்கு முகம் மற்றும் இரண்டு கைகளும் மாற்றி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் ரோட்ரிக்ஸ் அவர்கள் தலைமையில் 96 சுகாதார பணியாளர்களுடன் நடைபெற்றுள்ளது. தற்போது இவருக்கு அறுவை சிகிச்சைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை தோல்விக்கு பின்புதான் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் இதுதான் உலகிலேயே முதன்முறையாக நடைபெற்றுள்ள முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…