பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவடைகிறது.
பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்க மத்திய பிரதேசம் செல்கின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…