ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நிலையில், உலகில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். இதனை அதிகாரிகளுக்கு மறைப்பதற்காக, தடுப்பூசிக்கு பதிலாக 6 பேருக்கு குளுக்கோஸ் மருந்தை செலுத்தியுள்ளார்.
இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது இவரது இந்த செயல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செஞ்சிலுவை சங்க தடுப்பூசி மையத்தில் டோஸ் வழங்கப்பட்ட 200 பேரை அதிகாரிகள் பரிசோதிக்க முன்வருமாறு அழைத்துள்ளனர். இந்த செயல் குறித்து அப்பெண் கூறுகையில், “கைவிடப்பட்ட குப்பியைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்தாமல்இருக்கவே, இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…