கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். மேலும் விக்ரம் – 60 படத்திலும் தனது மகனான துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் இந்த படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ல் ஆக்ஷன் திரில்லராக வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது. ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்கா, லெட்சுமி மேனன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிக்கும் படம் கேங்க்ஸ்டர் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…