கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார்.
ரஷிய வெக்டர் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி “எபிவாகொரோனா” தடுப்பூசி அக்டோபர் 15 -க்குள் பதிவு செய்யப்படும் என்று கூறியது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் திறனைப் பாராட்டினார். மேலும், நாட்டின் சுகாதார அமைப்பு இப்போது அதை திறம்பட சமாளிக்கத் தயாராக உள்ளது என்றார்.
கொரோனா தொற்றுநோய்களின் போது மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டோம் என்று கூறினார். சுகாதார அமைப்பின் செயல்திறன் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் நாட்டின் சுகாதார அமைப்பின் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது.
குளிர் தொடர்பான நோய்களை திறம்பட எதிர்த்துப் போராட நாட்டின் சுகாதார அமைப்பு இப்போது தயாராக உள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் வெற்றிபெற்ற உலகின் முதல் நாடு ரஷ்யா என்பதை உங்களுக்குச் சொல்வோம் என தெரிவித்தார்.
ஆகஸ்ட் 01 -ம் தேதி ரஷ்யா தனது முதல் கொரோனா தடுப்பூசியான ” ஸ்பூட்னிக்” பதிவு செய்தது. இதுவரை, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் காரணமாக பேர் 1,128,836 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கொரோனா அதிகம் பாதித்த அமெரிக்கா விரைவில் தனது நாட்டில் தடுப்பூசி வருவதற்கான வாய்ப்பு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…