சூர்யாவின் சூரரை போற்று படத்தின் டிரைலர் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தை பெரிய விலைக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆம் 15கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 50கோடி அளவில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் அது முற்றிலும் பொய் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அது மட்டுமின்றி சூரரை போற்று படத்தின் டிரைலர் சூர்யாவின் பிறந்தநாள் தினமான ஜூலை 23ம் தேதி வெளியிடப்படும் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உண்மையா என்பது தெரிய வரும்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…