அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் தனது கணவனுடன் 38 வயதுடைய பெண் சண்டையிட்டு அடிதடியில் இறங்கியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் செரி சாண்டர்ஸீடம் கணவனை தாக்கியது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது போதையில் இருந்த அந்த பெண் காவல்துறையினரை மிரட்டியதுடன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவருக்கு கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர்.அப்போது அந்த பெண்மணி அவர்களை காலால் உதைத்துடன் சத்தம் போடவும் தொடங்கியுள்ளார்.
பின்னர் அவரை பிடித்த காவல்துறையினர் கைவிலங்கிட முயற்சி செய்யும் போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் காலை கடுமையாக கடித்து குதறியுள்ளார்.அந்த பெண்ணிடம் சிக்கிய காவல்துறையினரின் காலை மற்ற காவல்துறையினர் கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த காவல்துறையினரின் காலில் சுமார் 2 இன்ஜி ஆழத்திற்கு பல் பதிந்துள்ளது.அவர் சிறுது நேரத்தில் மயங்கி கீழே விழ சக காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அளைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் மீது குடும்ப தகராருடன் காவல்துறையினரை தாக்கியது மற்றும் கைது செய்ய வந்த காவல்துறையினரை தாக்கி கடித்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…