இளம் நடிகையான ஆஷிமா நர்வால் புகை பிடிக்கும் வீடியோ இணயத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆஷிமா நர்வால் ஒரு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாடல் மற்றும் நடிகை. மேலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார்.
சினிமா நடிகைகள் குறித்த சர்ச்சைகளும், விமர்சனங்ளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம். அந்த வகையில் நடிகை ஆஷிமா நர்வால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், இவர் புகைப்பிடிக்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தது.
ஆனால், இது குறித்து அவர் அந்த பதிவில் கூறியதாவது, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.
பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது.
ஆனால், பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…