கடந்த ஆண்டில் இந்த கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை- சுப்மான் கில் வேதனை..!

இந்தியாவின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு 2023 சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஒருநாள் மற்றும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற பெருமையையும், அதே நேரத்தில், 2023 இல் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். சுப்மன் கில் டெங்கு காரணமாக உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு, சுப்மன் கில் முன்பு போல விளையாட நிறைய போராட வேண்டியிருந்தது. 2023 இல் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் போட்டிகள் நன்றாக அமையவில்லை. இதற்கிடையில், புத்தாண்டையொட்டி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “2023ம் ஆண்டு அனுபவம், வேடிக்கைகள் மற்றும் சிறந்த கற்றல்களால் நிறைந்தது. ஆனால், திட்டமிட்டபடி சரியாக எதுவும் நடக்கவில்லை, நான் நினைத்ததுபோல இந்த ஆண்டு எனக்கு அமையவில்லை. இருப்பினும், கடுமையான உழைத்து இலக்கை நோக்கிச் சென்றோம் என்பதை  பெருமையுடன் கூறுவேன். 2024ஆம் ஆண்டு திட்டமிட்டபடி எங்கள் இலக்குகளை அடைந்துவிடுவோம் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் சில புகைப்படங்கள் இருந்தது. மேலும், அவர் 31 டிசம்பர் 2022 அன்று அடுத்த ஆண்டு (அதாவது 2023) தான் செய்ய வேலைகளை குறித்த பட்டியல் இருந்தது. சுப்மன் கில் தனது கையால் எழுதப்பட்ட பட்டியலில் 2023 இல் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடிக்கவும்,  ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வெல்லவும், உலகக்கோப்பையை தனது அணியுடன் வெல்லவும், என் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்வது, என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும் உள்ளிட்டவை இருந்தது.

அவர் எழுதிய பட்டியலில் இரண்டு இலக்குகளை அவரால் அடைய முடியவில்லை. சுப்மன் கில் கடந்த ஆண்டு (2023)  ஏழு சதங்களை அடித்தார். இது கோலியை விட ஒரு சதம் குறைவானது. உலகக்கோப்பையை வெல்லும் கனவைக் கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்