திருப்பாவை
பாடல் : 8
கீழ்வானம் வெள்ளென் றெஉமை சிறுவீடு
மெய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கேது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றராய் தருளேலோ ரெம்பாவாய்.
-ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
மனமகிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிது நேரம் விடுதலை பெற்று மேய்வதற்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற் பலர் சென்றுவிட்டனர்.மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப் போகவிடாமல் நிறுத்தி வைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்து வா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கஞ்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கல் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், ‘ஆ’ என்று வாய் திறந்து இரக்கம் காட்டி ‘வா’ என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…