திருப்பாவை
பாடல் : 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும்
மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன் மாதவன் வைகுந்த’ னென்றென்று
நாமம் பலவும் நவின்றலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம்:
தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும்,அகில் முதலியவற்றின் புகை மணக்கவும்,தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையில் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகள் இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை ஆதலால் அவள் தாயை எழுப்ப வந்தவர்களின் மாமியை அழைத்து,அவளை எழுப்பும் படி வேண்டுகின்றனர்) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாதலால் ஊமையோ? அல்லது செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறளோ? மாமாயனே,மாதவனே! வைகுந்தனே! என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை;அவளை எழுப்ப மாட்டீர்களோ? என்று ஆண்டாள் இயற்றி உள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…