பெரும்பாலும் பெண்கள் அனைவருமே வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து அழகு படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக வீட்டில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை வைத்தே சற்று நேரத்தை செலவிடுவதன் மூலம் அழகாக வீட்டை மாற்ற முடியும். அப்படி என்ன செய்வது என நினைக்கிறீர்களா? ஒன்றுமில்லை முட்டை ஓடுகளை வைத்து அட்டகாசமான பொருட்களை செய்து, வீட்டை அழகுபடுத்த முடியும். அவ்வாறு சில பொருட்களை எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முட்டை ஓடுகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் நாம் விரும்பக்கூடிய வண்ணங்களைத் தீட்டி வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அட்டை பெட்டியை சதுரமாக வெட்டி போட்டோ பிரேம் போல தயாரிக்க வேண்டும். பின் பெட்டியின் மீது வண்ணம் தீட்டி வைத்துள்ள முட்டை ஓடுகளை ஒட்டி வைத்து விடவேண்டும். இதற்குள்ளே புகைப்படங்கள் எதையாவது வைத்து போட்டோ பிரேம் போல உபயோகப்படுத்தலாம். இதை ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயம் கடைகளில் காசு கொடுத்து வாங்க கூடியதை விட அட்டகாசமாக இருக்கும்.
அடுத்ததாக மேஜை அலங்காரத்திற்காக வைக்கக்கூடிய பொருளை முட்டை ஓட்டில் தயாரிக்கலாம். அதாவது முட்டையை உடைக்கும் பொழுது பெரிதாக உடைத்து விடாமல், சிறிய அளவில் துளையிட்டு முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னதாக முட்டை ஓட்டை லேசாக அலசிவிட்டு, இதனுள் பஞ்சு வைத்து அடைத்துவிட வேண்டும்.
பின் நாம் துளையிட்ட பகுதியை ஒட்டி விட்டு, முட்டையை சுற்றிலும் நாம் விரும்பிய வண்ணங்களில் பூக்கள் அல்லது விலங்குகள் படங்களை வரைந்து அழகுபடுத்தலாம். இது போன்று ஐந்து, ஆறு முட்டைகளை நாம் விரும்பியபடி வண்ணம் தீட்டிய பின்பு ஒரு கூடையில் வைக்கோல்களை நிரப்பி வைத்து விட்டு, இதை நமது மேஜை மீது வைக்கலாம். அட்டகாசமான அழகு கொடுக்கக்கூடிய ஒரு பொருளாக இது இருக்கும்.
முட்டை ஓட்டை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு கம்புகளை வைத்து மரம் போல சிறிய அளவில் தயாரித்து அதை சுற்றி நிறம் பூசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள முட்டைகளை நூலில் கட்டி இந்த மரத்தின் மீது தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். குருவி அல்லது கோழி குஞ்சுகள் போன்ற பொம்மைகளை இந்த முட்டை ஓட்டில் வைத்து விட வேண்டும். இதை நமது மேஜை மீது வைக்கும் பொழுது அட்டகாசமான ஒரு அழகை கொடுக்கும். இது போன்று பலவற்றை முட்டை ஓடுகளை வைத்து செய்ய முடியும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…