கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி இந்த நிலையில், அமெரிக்காவில் பாதுகாப்பு காரணமாக டிக்டாக் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எழுந்து உள்ளது.
மேலும், அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம் தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும், டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்த 3,80,000 வீடியோக்களை நீக்கியதாகவும், வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை பதிவிட்ட 1,300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும், 64,000 கருத்துகளும் நீக்கப்பட்டன என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…