இன்றைய (05.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும் உணர்ச்சி வசப்படுதலையும் இன்று தவிர்க்க வேண்டும். இன்று வேலைப் பளு அதிகமாகக் காணப்படும்.

ரிஷபம்: இன்று நீங்கள் மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். இன்று கவனக்குறைவு ஏற்படலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். நீங்கள் செய்யும் செயலை சரியாக முடிப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இன்று வேலையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

கடகம் : இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். முன்னேற்றமும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இன்று பணியிடத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்: இன்று யதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய எதிர்பார்ப்புகளுடன் செயலாற்றாதீர்கள். ஏமாற்றங்கள் ஏற்படலாம். இன்று அதிக பணிச்சுமை காரணமாக பணியை திறம்பட செய்வதில் சில தடைகள் இருக்கும்.

கன்னி: இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறலாம். சவால்களை எதிர்கொள்ளும் நாள். 

துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம்: இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். இன்றைய நாளில் நீங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இன்று மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.

தனுசு: இன்று சில அசௌகரியங்கள் ஏற்படலாம். பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். 

மகரம்: இன்று யதார்த்தமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் நேரலாம். அனுசரித்து போவதன் மூலம் திறம்பட பணியாற்ற முடியும்.

கும்பம்: இன்று மகிழ்ச்சியான மன நிலை இருக்கும். உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மை கிட்டும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள்.

மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்களையே தரும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். இன்று நண்பர்கள் கூட உங்கள் விரோதிகளாக மாற வாய்ப்புண்டு.

Published by
பால முருகன்

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

4 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

5 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

5 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

6 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

6 hours ago