மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். பணியிடச் சூழல் பனியின் செயல்திறனில் உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமாக இருக்கும்.
ரிஷபம்: இன்று சில மாற்றங்கள் காணப்படும். அதற்கு தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நற்பயன் அளிக்கும்.
மிதுனம்: நீங்கள் இன்று எதிர்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.உற்சாகமான நேர்மறையான போக்கை மேற்கொள்ளுங்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
கடகம் : இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உறுதி மற்றும் தைரியம் மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள்.
சிம்மம்: இன்று உங்கள் எதிர்காலம் பற்றிய அதிக சிந்தனையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தித் தரும்.
கன்னி: இன்று சில பதட்டமான சூழ்நிலை காணப்படும். அதிலேயே அதிக நேரம் கழியும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.
துலாம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. இன்று அவநம்பிக்கையும் பதட்டமும் காணப்படும். இசை கேட்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
விருச்சிகம்: இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் செயல்களை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.
தனுசு: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது அல்லது திரைப்படம் பார்ப்பது போன்ற நிகழ்சிகள் மூலம் மனதை திசை திருப்பி ஆறுதல் பெறலாம். நீங்கள் பொறுமையின்றி செயல்படுவதை விட புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.
மகரம்: இன்று அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைப்பது கடினமாக உணர்வீர்கள். நீங்கள் பதட்டத்திற்கு ஆளாவீர்கள்.
கும்பம்: இன்று விருப்பமான பலன் காண சாதகமான நாள் அல்ல. நீங்கள் உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைப் படுவீர்கள். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீனம்: இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். ஆன்மீக ஈடுபாடு சிறந்த ஆறுதல் தரும். நீங்கள் விரைவில் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும் .பணியைப் பொறுத்தவரை நல்ல பலனடைவீர்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…