வரலாற்றில் இன்று(07.01.2020).. ஜம்மு காஷ்மீர் முன்னால் முதல்வர் முப்தி முகமது சயித் மறைந்த தினம்..

Published by
Kaliraj

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக இருக்கும் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனமாக இருந்த அம்மாநில முன்னால் முதல்வரின் நினைவுநாளான இன்று அவரது நினைவை போற்றுவோம்.

பிறப்பு:

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பழுத்த  அரசியல்வாதி முப்து முகமது சயித் ஆவார். இவர் 1936ம் ஆண்டு  ஜனவரி மாதம், 12ம் நாள் பிறந்து ,  2016ம் ஆண்டு  ஜனவரி மாதம்  7ம் நாள் இந்த உலகை விட்டு பிரிந்தார்.

Image result for mufti muhammad syed

அரசியல் வாழ்க்கை:

இவர் 2002 ம் ஆண்டு நவம்பர் மாதம்  2ம் நாள் முதல் 2005ம் ஆண்டு  நவம்பர் மாதம்  2ம் தேதி , வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இருந்தார். பின் இவர்,  மீண்டும் இரண்டாம் முறையாக 2015ம் ஆண்டு  மார்ச் மாதம் மீண்டும்  ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக  பதவியை ஏற்றார். பின் 1999 ஆம் ஆண்டு  ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார்

விரிவான தகவல்கள்:

முப்தி மொகமது சயீது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த இவர், 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியில்  இருந்தார்.பின்னர் வி.பி.சிங்கின்  கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். பின் 1989 ஆம் ஆண்டு  இந்திய உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத்தை  சில பயங்கரவாதிகள் கடத்ததினர். அவரை விடுவிக்க அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.  பின்னர் பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீர் மக்களடுன் நிபந்தனையற்ற உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்பதற்க்காக 1999 ஆம் ஆணடு தன் மகள் மெகபூபா முப்தியுடன் இணைந்து , ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். பின் பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜம்மு காஷ்மீரில் மாநில அரசின் முதல்வரானார்.

மறைவு:

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த போது இவருக்கு  உடல்நலக் குறைபாடு காரணமாக புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 7, 2016 அன்று தன் 79 வயதில் காலமானார். ஜம்மு காஷ்மீர் மக்களின் மனமாக பிரதிபலித்த முப்தி முகமது சயித்தை அவரது மறைவு நாளில் நினைவு கூறுவோம்.

Published by
Kaliraj

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

9 hours ago