இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-வது ஆண்டு நினைவு தினம்.
செல்வி ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயராம்-வேதவல்லி. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார். செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன்னாள் தமிழக முதலமைச்சரும், அரசியல் தலைவரும், பிரபல தென்னிந்திய நடிகையும் ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 120-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செல்வி ஜெயலலிதா அவர்கள், டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரண செய்தி தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்க செய்தது. அதிமுகவின் பொது செயலாளராக 6 முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பெண் ஆளுமையாக தான் செயல்பட்டார். எனவே தான் இவரை தமிழகமே ‘அம்மா’ என்று அழைக்கின்றது.
தன் திறமையான ஆளுமையாலும், தைரியமிக்க செயலாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள், டிச.5ம் தேதி தனது உலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…