Tag: #Jayalalitha

முதலமைச்சர் பெருந்தன்மையை பாராட்ட இபிஸ்க்கு மனமில்லை! மேயர் பிரியா கண்டனம்!

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரின் ஆய்வு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்து இருந்தார். இது குறித்து அவர் கூறியிருந்ததாவது “முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் […]

#ADMK 7 Min Read
mk stalin priya rajan eps

வாய் பந்தல் வேண்டாம்.. நடவடிக்கை எடுங்கள்.! வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!

சென்னை: அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சன அறிக்கைகையும், ஓர் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள பொருட்களின் இருப்பு பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை […]

#ADMK 8 Min Read
CM MK Stalin Inspected Amma Unavagam in chennai - ADMK Chief secretary Edappadi palanisamy

21 கோடி ரூபாய்.! அம்மா உணவகங்களுக்காக முதல்வர் புதிய உத்தரவு.!

சென்னை: கடந்த 2013இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் , அதிமுக ஆட்சியை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக்காலத்திலும் அதே பெயரில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தனது அலுவல் பணிகள், நலத்திட்ட பணிகளை […]

#ADMK 3 Min Read
Tamilnadu CM MK Stalin inspected Amma Unavagam in Chennai

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஆதரவு கேட்கும் அன்புமணி.! அதிமுகவின் நிலைப்பாடு என்ன.?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவினர் பாமகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோரிக்கை வைத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 13இல் வெளியாக உள்ளது . தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் ராஜா போட்டியிடுகிறார். பாமக சார்பில் […]

#ADMK 6 Min Read
Anbumani Ramadoss - Jayalalitha

தைரியம் இருந்தால் உங்கள் தலைவர்களை பற்றி பேசுங்கள்.. அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமர் சவால்.!

மதுரை: ஜெயலலிதாவை பற்றி கூறி பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் தலைவர்களின் பெருமைகளை கூறி மக்களிடம் ஆதரவு பெறுங்கள் – ஆர்.பி.உதயகுமார். சில தினங்கள் முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் பற்றி தனியார் செய்தி சேனல் நேர்காணலில் , ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறிய கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு […]

#ADMK 6 Min Read
ADMK Ex Minister RB Udhayakumar - BJP State President Annamalai

ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.. ஆனால்.., காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு பேட்டி.!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார். சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும்,  அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் […]

#ADMK 4 Min Read
Former Tamilnadu CM Jayalalitha

ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா.? அதிமுகவில் வலுக்கும் கண்டனங்கள்.!

அதிமுக: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு தனது கண்டனங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஓர் இந்துத்துவா தலைவர் என கூறினார். மேலும், 2014 தேர்தல் சமயத்தில் பாஜகவா , ஜெயலலிதாவா என்று பார்த்தல் இந்துக்களின் தேர்வு ஜெயலலிதாவாக இருந்தார் என்றும், அவர் தன்னுடைய […]

#ADMK 7 Min Read
Annamalai - Jayalalitha

எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை செய்த பாஜக பிரமுகர்கள் சஸ்பெண்ட்

BJP: புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை […]

#BJP 3 Min Read

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடக்கோரி தொடர்ந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து தமிழக அரசு ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது. அதன்படி, சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் […]

#CBI 5 Min Read
Jayalalitha

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்.! 

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா […]

#ADMK 8 Min Read
Edappadi Palaniswami - O Panneerselvam

பல்கலைக்கழக வேந்தர் பதவி.! ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை அளித்தார். மாநிலத்தில் முதல்வர் வேந்தராக பொறுப்பில் இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில், பிரபல திரைப்பட பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இசை கலைஞர் பி.எம்.சுந்தரம் அவருக்கும் […]

#ADMK 6 Min Read
Tamilnadu CM MK Stalin - Former Tamilnadu CM Jayalalitha

ADMK 52 : எம்ஜிஆரும்.. அதிமுகவின் வளர்ச்சியும்…

தமிழகத்தில் இரு பெரும் பிரதான கட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக – ADMK). இந்த கட்சி தொடங்கி இன்று தனது 52ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 30 ஆண்டுகாலம் ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது. பிரதமர்களை உருவாகியுள்ளது. முதல் திராவிட மத்திய மந்திரிகளை உருவாக்கியது என்று பல பெருமைகள் அதிமுகவிற்கு உள்ளது. அதிமுக தொடங்கியதை பற்றி கூற வேண்டும் என்றால், அதில் அரசியல் எதிர் நிலைப்பாட்டாளர்களாக உள்ள திமுகவை பற்றியும் கூறித்தான் ஆகவேண்டும். […]

#ADMK 11 Min Read
ADMK - MGR - JAYALALITHA

ஜெயலலிதா நினைவு தினம் எப்போது.? விசாரணை அறிக்கையால் குழப்பம்.? அதிமுக திட்டவட்டம்.!

ஜெயலலிதா நினைவு தினம் வழக்கம் போல டிசம்பர் 5ஆம் தேதி தான் 6ஆம் ஆண்டான இந்தாண்டு அனுசரிக்கப்படும் என அதிமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு வருடாவருடம் அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த வருடம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் […]

- 3 Min Read
Default Image

கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது – அண்ணாமலை

பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்றிருப்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழக பாஜக அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறது. இந்த இடஒதுக்கீட்டை இந்திய […]

#Annamalai 4 Min Read
Default Image

ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றிட வேண்டும் – டிடிவி.தினகரன்

சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதியாகும் என டிடிவி.தினகரன் கருத்து. தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் […]

#Jayalalitha 5 Min Read
Default Image

நீங்களும் சரியில்ல… வைரலாகி வரும் மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ.?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை வெளியான சமயத்தில் ஜெயலலிதா மருத்துவரிடம் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு சட்டசபையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சசிகலா, […]

- 4 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைக்கு கருத்து கூற விரும்பவில்லை.! ஓபிஎஸ் பதில்.!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறினார்.  வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அதிமுக கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணியினராக இருப்பதால், இரு தரப்புமே தங்க […]

- 4 Min Read
Default Image

சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை – தமிழக அரசு உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியீடு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை […]

#Jayalalitha 5 Min Read
Default Image

ஜெ. மரண அறிக்கை; கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓபிஎஸ் பதில்

சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக அரசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக […]

#Jayalalitha 4 Min Read
Default Image

ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5 அல்ல 4.! நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு […]

- 5 Min Read
Default Image