மேஷம் : இன்று சற்று குடும்பச்சுமை கூடும் ஒரு நாள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தொழில் மாற்றச்சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. வெளியூர் பயணத்தின் மூலம் பிரியமானவர்களின் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம் : இன்று லாபகரமான நல்ல நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் நல்லவர்களின் தொடர்பு மூலமாக நலம் காண்பீர்கள். உங்களின் கடல் பயண வாய்ப்புகள் எல்லாம் கை கூடும்.
மிதுனம் : இன்று எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நல்ல நாள். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். மேலும் உங்கள் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
கடகம் : இன்று பதவியில் உள்ளவர்களின் உதவி மூலமாக செயல்கள் நிறைவேறி மகிழும் நாள். உங்களை உதாசீனப்படுத்தி தூக்கி எரிந்தவர்கள் எல்லாம் தற்போது உங்களுடைய உதவி கேட்டு வந்து நிற்பர். பழைய பிரச்சினை போன்றவைகள் அகலும் ஆரோக்கியத்தில் அக்கரைத் தேவை.
சிம்மம் : வழிபாட்டு மூலமாக இன்று வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியில் மறைமுகப் போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி ,வாகன வழியில் திடீர் செலவு ஏற்படும்.கோபத்தை குறைத்து யாரையும் உதாசீனப்படுத்தாமல் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி : உங்க்களுக்கு மாலை நேரத்தில் மனகுழப்பம் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காத போதிலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமாக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
துலாம் : உங்களின் உத்தியோக முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். இன்று உயர்ந்த மனிதர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் திருப்தி தரும். மதிப்பும்மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக படாய் படுத்திய நோயிலிருந்து விடுபட்டு நிவாரணம் காண்பீர்கள்.
விருச்சிகம் :வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டுகின்ற நல்ல நாள். வி.ஜ.பிக்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் நலன் கள் மீது அதிக அக்கரை காட்டுவீர்கள். தங்களின் உற்ற நண்பர்கள் நல்ல தகவல் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பர்.
தனுசு : தனவரவு திருப்தி தருகின்ற நல்ல நாள்.வாகனத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.வாயிலில் சுப காரியங்கள் நடைபெற அறிகுறிகள் தென்படுகின்றன.வியாபாரத்தில் எதிர்பாத்த விருத்தி உண்டு.
மகரம் : உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுகின்ற நல்ல நாள். இன்று உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன் வருவீர்கள்.
கும்பம் : எதிர்பார்த்த லாபம் இன்று இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி ஆனந்தமடைவீர்கள்.புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம் : பயணத்தால் இன்று பலன் கிடைக்கும் நாள். உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி ஆகும். தொழில் முன்னேற்றத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கும்.வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரலாம்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…